இலங்கைக்கு நிதி உதவி; கைவிரித்தது உலக வங்கி!

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும்வரை இலங்கைக்கு புதிய நிதி உதவியை வழங்கும் திட்டம் எதுவுமில்லை – என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடன் வழங்க புதிய கடன் உறுதிப்பாடுகளை வழங்க உலக வங்கி திட்டமிடுவதாக வெளியான ஊடக தகவல்கள் தவறானவை.

இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. நாம் ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆனால், இலங்கைக்கு நிதி உதவியை வழங்க திட்டமிடவில்லை.

இலங்கை, பொருளாதார நிலை தன்மையை அடைவதற்கான தெளிவான கொள்கைக் கட்டமைப்பை வகுக்கவேண்டும். இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews