யாழ்.நல்லுார் பிரதேசசபையின் முன்மாதிரியான நடவடிக்கை..!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலையினை கருத்தில் கொண்டு நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு இரு திட்டங்கள் செயல்ப்படுத்தப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் ப.மயூரன் கூறியிருக்கின்றார்.

நேற்றையதினம் நல்லூர் பிரதேச சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்கவும் வறுமை நிலையிலிருந்து தணிப்பதற்கும் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய குறுங்கால வீட்டுத் தோட்டப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக தொிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு

விதைகள், நாற்றுகள், இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் சனசமூக நிலையங்களை தயார்ப்படுத்தி அவற்றின் ஊடாக வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவுப் பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணி வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு எந்த உதவிகளையும் நல்லூர் பிரதேச சபை மேற் கொள்வதற்கு தயாராக உள்ளது. எம்முடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews