தீவக கடற்றெழிலாளர்களுக்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட அட்சயபாத்திர உதவிகளில் மண்ணெண்ணெய் நேற்றைய தினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கிவக்கப்பட்டது
இந்திய அரசினால் வழங்கப்பட்ட சுமார் 15,000 லீட்டர் மண்ணெண்ணெய் தீவகப் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
வேலணை மற்றும் ஊர்காவற்துறை மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நிகழ்வு ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய துணைத்தூதர் நடராஜ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவி, நீரியல் வளத் திணைக்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.