சுன்னாகம் பொலிஸாரால் சுமார் 2 ஆயிரம் லீட்டர் எரிபொருள் மீட்பு.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று   சனிக்கிழமை  சுன்னாகம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலை தெற்கு பகுதியில் உள்ள தனியார் கடையொன்றில் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணை என்பவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிஸ் விசேட பிரிவுக்க வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது 200லீற்றர் டீசலும் ,310லீற்றர் பெற்றோலும் ,1670லீற்றர் மண்ணெண்ணெய்  சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து குறித்த எரிபொருளை பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் சுன்னாகம் மயிலங்காடு, குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 40மற்றும் 50 வயதை சேர்ந்த இருவரை  பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
 யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews