தனது பிள்ளையை தேடிய மேரி மற்றிமா புஸ்பராணி அம்மா  தாய் மரணம்……!

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்  முன்னாள் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை கடந்க  2015 ஆம் ஆண்டு ஆரம்பித்தவருமான திருமதி மேரி பற்றிமா புஸ்பராணி அவர்கள் இன்றைய தினம் அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
 இவர் யுத்தத்தில் ஒரு மகனை இழந்த நிலையில் இன்னொரு  மகனை காணாமல்  போயிருந்த நிலையில்  கடந்த 13 ஆண்டுகளாக தேடித்தேடி அலைந்து இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். தமது பிள்ளைகளை  தேடித்தேடி பல ஆண்டுகளாக அலைந்து திரிந்த பல நிலையில் பல பெற்றோர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு தாளையடியைச் சேர்ந்த மேரி பற்றிமா புஷ்பராணி அவர்களின் மரணமும் இடம்பெற்றிருக்கும்

Recommended For You

About the Author: Editor Elukainews