அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது.
1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation
இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து குறித்த பாதுகாப்பென நம்பி தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமான குண்டுதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல் மூலம் 18. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்
அவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தலே நேற்று இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக பொது சுடர் ஏற்றப்பட்டு பின்னர் மலர் அஞ்சலி, அகவணக்கம் என்பன இடம் பெற்றன.