சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் எதிர்வரும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டுமுகமாகவும் இலங்கை பணத்தை வீணாக வெளிநாடுகளுக்கு அனுப்ப கூடாது சிகரெட் விலையை உரிய முறையில் அதிகரித்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கும் கையெழுத்து வேட்டை சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் சங்கானை பிரதான பேருந்து நிலையத்தின் முன்பாக காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது விழிப்புணர்வு பொறிக்கப்பட்ட பதாகைகளில் இளைஞர்களால் கையெழுத்து வேட்டை சேகரிக்கப்பட்டதோடு மாதிரிக் கையொப்பம் வடிவத்திலும் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன . இவ்வாறு சேகரிக்கப்பட்ட 1000பேருக்கு மேலாக சேகரிக்கப்பட்ட கையெழுத்து அடங்கிய படிவம் பிரதமர் அலுவலகத்திற்கும் நிதி அமைச்சருக்கும் அனுப்பப்பட உள்ளதாக சங்கானை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வரத்தினம் சசிதரன் தெரிவித்தார் .
இந்த கையெழுத்து திரட்டும் நிகழ்வின் போது வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன், பிரதேச சபை உறுப்பினர்கள், சங்கானை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வரத்தினம் தசிதரன்,தன்னார்வ அமைப்பினர், சங்கானை இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.