21ஐ நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு- சட்டமா அதிபர் அறிவிப்பு! –

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பாக, சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான இந்திக தேமுனி டி சில்வா யர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு எதிராக கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்டோர் தாக்கல் செய்த பல மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவநேக அலுவிஹாரே, ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews