ஹெக்னேலிகொட வழக்கு: 9 புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்.

ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

கிரித்தலே இராணுவ முகாமின் மு்னனாள் கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் ஷம்மி குமாரரத்ன உட்பட 9 புலனாய்வாளர்களின் பிணையை சிறப்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

இந்த புலனாய்வு அதிகாரிகள் குழு, வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது என்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அடுத்தே நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான திருக்குமார் என்பவரின் சாட்சியத்தை மேல் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்த போதே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட 9 புலனாய்வு அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews