தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நேற்றைய தினம் (03) தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக VAT வரியை 8%லிருந்து 12% ஆக அதிகரிப்பதன் மூலம்

தொலைபேசி கட்டணம் கிட்டத்தட்ட 08% வரை அதிகரிக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRC) தெரிவித்துள்ளது. இருப்பினும், இணைய கட்டணங்களுக்கு  தொலைத் தொடர்பு வரி பொருந்தாது எனவும் VAT வரிக்கு அமைவாக இணைய கட்டணங்கள் 4% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews