லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அதேபோல், லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.