முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள விசுவமடு விஸ்வநாதன் ஆரம்பபாடசாலையில் மாணவர்கள் நேற் றைய தினம் 07.06.2022தமது பாடசாலையில் ஒரு வருட காலமாக பாடசாலை அதிபர் இன்மை காரணமாக கற்றல் நடசடிக்கையில் பல்வேறு சிக்கல் நிலை உள்ளதாக தெரிவித்ததுடன் கடந்த வருடம் 376 மாணவர்கள் கற்றுவந்தநிலையில் இந்தவருடம் 299 மாணவர்களே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்ததுடன். அதிபர் இன்மை காரணமாக பல மாணவர்கள் வேறு படசாலைகளுக்கு சென்றுள்ளதபகவும் புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சிறந்தபெறுபேர்களை பெற்று ஒரு சிறந்தபாடசாலை என பலராளும் போற்றப்பட்ட பாடசாலைக்கு இப்படி ஒரு நிலைக்கு வந்தமையினைகண்டு பலர் கவலையடைந்துள்ளதாகவும் இந்நிலையினை மாற்றப்படவேண்டும் என நேற்றைய தினம் 07.06.2022பாடசாலை வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கையினை மேற்கொண்டு ஒர் புதிய அதிபர் ஒருவரை நியமனம் செய்ய வு நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
Previous Article
கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்.
Next Article
பளையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்…..! விடு சேதம்.