யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா.

யாழ். மாவட்டத்தின் புகழ்பூத்த கல்லூரிகளில் ஒன்றான சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் மாணவ முதல்வர் சபையின் ஏற்பாட்டில் கடந்த  திங்கட்கிழமை(06.6.2022) காலை-8.30 மணிக்கு மேற்படி கல்லூரி முன்றலில் கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இறை வணக்கம், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து ஸ்கந்தாநிதியப் பெயர்ப்பலகையை யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அமெரிக்கா கிளைத் தலைவரும், ஸ்கந்தா நிதிய உறுப்பினருமான கே.பாலசுப்பிரமணியம் திரைநீக்கம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்கந்தா நிதியத்தால் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைப் பெயர்ப்பலகையை யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் யாழ்ப்பாணத்திற்கான பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் சேது விபுலானந்தா திரைநீக்கம் செய்து வைத்தார். ஸ்கந்தா நிதியத் தலைவர் மருத்துவர் கே.சிவகுமார் திறன் வகுப்பறைச் செயற்பாடுகளைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்

இதன்போது மாணவர்களின் பயன்பாட்டிற்கு என ஒருதொகுதிக் கதிரைகளும் கையளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விழா நிகழ்வில் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரியின் அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

 நிகழ்வில் ஸ்கந்தா நிதியத்தின் கனடாக் கிளைப் பணிப்பாளர் கே.மகேந்திரலிங்கம், யாழ்.ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அமெரிக்கா கிளைத் தலைவரும், ஸ்கந்தா நிதிய உறுப்பினருமான கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கல்லூரி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அரும்பெரும் சேவைகளைப் பாராட்டிக் கல்லூரிச் சமூகத்தினால் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews