முல்லைத்தீவு அளம்பில் புதிய அ்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு குறித்த திருவிழா திருச்செபமாலையடன் ஆரம்பமாகவுள் ளது.
திருவிழா திருப்பலியானது மறுநாள் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பிக்க உள்ளனர்.
அதற்கான அழைப்பு பங்கு தந்தையர்களாலும், பங்கு மக்களாலும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.