முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (10/06/2022) சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது.
குறித்த நினைவு அஞ்சலி நிகழ்வில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கிபிர் மற்றும் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக பொதுச்சுடர், ஈகை சுடர் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
பொது சுடரினை சுதந்திரபுரத்தில் நிகழ்ந்த வான்படை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த தந்தை ஒருவரால் ஏற்றப்பட்டது.
குறித்த தாக்குதல் உக்ரைன் நாட்டு விமானமான கிபிர் விமானம் மூலம் வான் தாக்குதல், மற்றும் எறிகணை தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
குறித்த தாக்குதல் 1996.06.10திகதி நடாத்தியிருந்தனர்.
இதில் பொதுமக்கள் பலர் கொடூரமாக சாகடிக்கப்பட்டிருந்தனர்.
படுகாயமடைந்த பலர் இன்றும் அங்கவீனர்களாக துன்பப்படுகிறார்கள். குறித்த நினைவேந்தல் இடத்தில் அதிகளவான புலனாய்வாளர்கள் காண்கானிப்பில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.