குறித்த திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு தாம் அதிகார பலத்தை பயன்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அண்மையில் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் தலைவர் அவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
அத்துடன் ஆட்சியில் உள்ள அரசாங்கங்கங்களின் வெவ்வேறு தீர்மானங்கள் காரணமாக மின்னுற்பத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரியவந்தது.
எனினும் இது தொடர்பான குற்றச்சாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு நிராகரித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில், தாம் அழுத்தம் காரணமாக அவ்வாறான கருத்தை முன்வைத்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினெண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கு தாம் வருத்தமடைவதாகவும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் காற்றலை மின்னுற்பத்தி விவகாரம்: இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிக்கை வெளியீடு!
மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக்கான திட்டத்தை ஒரு நிறுவனத்திற்கோ அல்லது ஒரு நபருக்கோ வழங்குவதற்கு அதிகார பலம் பயன்படுத்தப்பட்டதாக தாம் கூறிய கருத்தில் உண்மையில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினெண்டோ தெரிவித்துள்ளார்.