மட்டு.ஏறாவூரில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு உதவித்தொகை வழங்கல்.

முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது.

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கான உதவித்தொகை வழங்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு ஏறாவூரில் நடை பெற்றது.

தியாகி அறக்கொடை நிதியத்தின்’ தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து இவ் உதவித்தொகைகளை வழங்கினார்.

இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் தலைவர்
தாவூத் முகம்மது உமர் அறபாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எச்.ஏ. ஹக்கீம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவியினை வழங்கி வைத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews