நாட்டில் தினமும் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய்க்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்பில் தொடர்மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் எரிவாயு விநியோகம் இல்லாத நிலையில் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய்யை நாட வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அருகே வீதியோரமாக நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே இடங்களிலேயே உணவுகளையும் உட்கொள்ளுகின்றனர்.
ரத்மலானை மற்றும் மொரட்டுவை பிரதேச மக்கள் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்து களைத்துப் போனமையால் தங்கள் கேன்களை வீதியோரங்களில் அடுக்கி வைத்துவிட்டு வீடுகளுக்கு சென்றுள்ளளனர்.
இதனிடையே வீதியோர வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் பொலிஸார் செயற்படத் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.