கொக்குவில் எரிபொருள் நிலையத்தில் டீசல் பதுக்கல் அரச அதிபரின் தலையீட்டால்  விநியோகம்..

கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் இறந்த நிலையில் தமக்கு இசைவான  வாகனங்களுக்கு விநியோகம் செய்துவிட்டு டீசல் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குழப்பமடைந்த ஏனைய வாகன சாரதிகள் டீசல் இருக்கின்ற நிலையில் தமக்கு விநியோகம் செய்யுமாறு கேட்டனர்.
இன் நிலையில் டீசல் இல்லை என எரிபொருள் நிலையத்தினரால் மறுத்த நிலையில் குறித்த விடயம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் டீசல் இருப்பதாக தெரிவித்து வாகன சாரதிகளுக்கு டீசல் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்கு நின்ற வாகன சாரதிகள் கருத்து தெரிவிக்கையில் குறித்த எரிபொருள் நிலைய உரிமையாளர் தமக்கு வேண்டிய வர்த்தக நிலைய வாகனங்களுக்கும் முகவர்களுக்கும்  இரவு நேரங்களில் எரிபொருள் விநியோகம் செய்வதாகத் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews