காத்தான்குடி நகர சபையும் அய்க்கா நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான உணவுப் பதார்த்தாங்கள தயாரித்து போத்தலில் அடைக்கும் பயிற்சி செயலமர்வொன்று இன்று காத்தான்குடி நகர சபையின் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் திருமதி சல்மா அமீர் ஹம்சாவின் தலைமையில் இந்த பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
இதில் அய்க்கா நிறுவனத்தின் பகுதி நேர விரிவுரையாளர்
யூணாணி வைத்தியர் திருமதி வஸீமா ஆதிப் இதில் கலந்து கொண்டு தக்காளி சுவையூட்டி உட்பட ஆரோக்கியமான முறையில் உணவுகளை தயரித்து போத்தலில் அடைத்து வியாபாரம் செய்யும் தொழிநுட்பம் தொடர்பான பயிற்சி செயலமர்வை நடாத்தினார்.
இதில் அய்க்கான நிறுவனத்தின் இணைப்பாளர் உட்பட பெண்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியான கால கட்டத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு அவர்கள் வீடுகளில் இருந்தவாறு இவ்வாறான தொழில் முயற்சிகளை மேற் கொள்ளும் வகையில் இந்த தொழில் பயிற்சி வழங்கப்பட்டதுடன் வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கையையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா இதன்போது தெரிவித்தார்.