டீசல் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த இரு சாரதிகளிடம் டீசல் என கூறி 24 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீரை விற்பனை செய்த ஆசாமி தப்பி ஓடி மறைந்துள்ளார்.
குறித்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. லொறி சாரதி ஒருவரும், பழ வியாபாரி ஒருவரும் டீசல் வாங்குவதற்கு வரிசையில் நின்றுள்ளனர்.
இதன்போது அங்குவந்த குறித்த மோசடி பேர் வழி கொள்கலன் ஒன்றில் டீசல் உள்ளதாக கூறி அந்த கொள்கலனை 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளான்.
எனினும் அதில் டீசலுக்கு பதிலாக தண்ணீரே இருந்துள்ளது. இதனையடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் குறித்த நபரை தேடிச் சென்றபோதும் மோசடி பேர்வழி அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.