எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு திங்கள் கிழமை தொடக்கம் வீட்டிலிருந்து வேலை மற்றும் இணையவழி கற்றல் – கற்பித்தல் நடைமுறைகளை மீளவும் நடைமுறைப்படுத்த அரசு ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்றும் பிற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர் அரச தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி தனது ருவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி தற்போதைக்கு ஊரடங்கு உத்தரவு எதுவும் விதிக்கப்படாது என அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமா?
என சில அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இருவரும் எதிர்மறையாக பதிலளித்துள்ளனர். எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது