இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய பின்பு திரும்பிச் சென்றுள்ளனர்.
குறித்த 7 பேரும் திருகோணமலை மன்னார் சேர்ந்தவர்கள் என அறிய கிடைக்கும் நிலையில் இந்திய கரையோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் கொண்டு சென்றுற்ளனர்.