நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஆறு இலட்சம் சைபர் தடுப்பூசிகளை மியன்மார் நாட்டுக்கு வழங்கிவிட்டு அதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து அரிசியை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மியன்மார் அரசங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் விநியோக சேவைகள் பணிப்பாளரும்; மருந்து உதவி ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இந்த ஃபைசர் தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளது.
இதேவேளை, சுகாதாரத் துறைக்காக ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து 15 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.