இனிமேல் பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள், கிராம வாசகர்களிடம் பதிவு செய்ய மாவட்ட செயலர் கோரிக்கை.

யாழ்.மாவட்டத்திற்கு எரிபொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. கடந்தவாரம்வரை தேவையான எரிபொருளை பெற முடிந்தது. ஆனால் தற்போது உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் ஜீலை மாதம் தொடக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலர் பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருளை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

பங்கீட்டு அட்டை கிராம உத்தியோகஸ்த்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கும், திணைக்கள தலைவர்கள் மற்றும் பிரதேச செயலர் ஊடாக அரச ஊழியர்களுக்கும் பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எரிபொருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவனோபாய தொழிலாளர்கள், அத்தியாவசிய அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் சகலருக்கும் தேவை அடிப்படையில் அளவு கணக்கிடப்பட்டே எரிபொருள் விநியோகம் நடைபெறும்.

எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews