நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருட்கள் தொடர்பான துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் உள்ள தாங்கிகளில் காற்று நீக்குவதற்காக எரிபொருள் தாங்கிகளில் உள்ள முழுமையான எரிபொருட்களை பாவனையாளர்களுக்கு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பதிலில் அவர் மேலும் தெரிவிக்கையில் எரிபொருள் தாங்கிகளிலுள்ள எரிபொருட்களை பாவனையாளர்களுக்கு முழுவதுமாக வழங்குவதில் எவ் விதமான பிரச்சினையும் இல்லை.
எரிபொருள் நிலையத்தார் கூறுவதுபோல எயார் எடுக்க வேண்டும் என்பதற்காக எரிபொருளை தேக்க வேண்டிய தேவையில்லை எயார் எடுப்பதற்கு சிறிது நேரம் போதுமானது என அவர் மேலும் தெரிவித்தார்.