நேற்றைய தினம் அதி காலை முதல் காத்திருந்த மக்களுக்கு பிறபகல் நான்கு மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தபின்னர் எரிபொருள் வழங்கப்பட்டது.
அங்கு அடிக்கடி அமைதி இன்மை ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்திகாரி தலமையில் நெல்லியடி போலீசாரின் ஒழுங்கமைப்பிலேயே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.
நேற்று பிற்பகல் 3:45 மணிக்கு எரிபொருள் தாங்கி வந்தவேளை அங்கு கூடியிருந்த சிலரால் தேங்காய் உடைத்து வரவேற்க்கப்பட்டது
இதேவேளை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கரவெட்டி பிரதேசத்திற்கு உட்படவர்களுக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கபட்டது.
இதேவேளை கல்வி பொதுச் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு என எரிபொருள் விநயோகம் பிறிதொரு வரிசையில் வழங்கப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடாத கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர் உட்பட பலருக்கும் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்களால் நெல்லியடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு சுட்டிக்காட்டப்பட்ட. நிலையில் உடனடியாகவே பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டாளர்கள் தவிர்ந்தவர்களுக்கு பெற்றோல் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இதே வேளை நெல்லியடி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரது உறவினர் ஒருவரது மோட்டார் சைக்கிளுக்கு முழுமையாக எரிபொருள் வழங்கப்பட்தாக அங்கிருந்தவர்களால் பகிரங்க குற்றசசாட்டு வைக்கப்பட்டுள்ளது
மேலும் மகிழுந்துகழுக்கு ரூபா 5000/-க்கும் முச்சக்கர வண்டிகளுக்கு 3000/- ரூபாவிறக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா 2000/- க்கும் வழங்குவது என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தும் மகிழுந்துகளுக்கு 2500, ,க்கும் பின்னர் 2000 அதற்கு பின்னர் சற்று நேரத்தில் 1500/- க்கும் வழங்கப்பட்ட அதேவேளை மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா 2000/ க்கு வழங்கப்பட்டு பின்னர் 1500,,க்கும் அதற்கு பின்னர் 1000/-விற்க்கு பின்னர் 500/- விற்க்குமே பெற்றோல் நிரப்ப பட்டது
நேற்றைய எரிபொருள் நிரப்பும் பணி நெல்லியடி போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே வழங்கப்பட்டது.
அரச உத்தியோகத்தர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக குறைந்தது ஆயிரம் லிட்டர் எரிபொருள் இருப்பு வைத்து எரிபொருள் வழங்கப்பட்ட நிலையிலும் அரச உத்தியோகத்தர் குறுக்கு வழிகளில் எரிபொருள் நிரப்ப முற்பட்டமை குறி்ப்பிட தக்கது