போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி….!

போரினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களிற்கு 6 லட்சம் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு  நேற்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு முள்ளியவளை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடாவில் வசிக்கும் குமார் என்பவரது 42வது பிறந்தநாளையொட்டி பெயர் குறிப்பிட விரும்பாத நெருங்கிய உறவினால் குறித்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வணக்கம் வாழ்கதமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது போர் சூழலில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு தாயக உறவுகளிற்கு கரம் நீண்டும் புலம் பெயர் உறவுகள் மக்களால் பாராட்டப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews