மந்திகையில் மக்களின் போராட்டத்தையடுத்து எரிபொருள் விநியோகம்….!

நேற்றும் இன்றும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படுகிறது.
நேற்றும் இன்றும மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து அவர்  உடனடியாக பருத்தித்துறை பிரதேச செயலர் ஆ.சிறி அவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைத்திற்க்கு அனுப்பி இருக்கும் பெற்றோலை அனைவருக்கும் பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்த நிலையில் பெற்றோல் தற்போது வழங்கப்பட்டு வருகிறது
இதனை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரூபா ஐநூறு வீதம் மோட்டார் சைக்கிளிற்கும், ஆயரம் ரூபாயிற்க்கு முச்சக்கர வண்டிகளுக்கும் வழங்கப்படுகிறது
முன்னதாக வீதியை காலை 9:00 மணியளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்களை கைது செய்து அச்சுறுத்தி விடுவிக்கப்பட்துடன்
ஊடகவியலாளர் சி.த.காண்டீபனும் பருத்தித்துறை போலீஸ் நிலைய பதில்  பொறுப்திகாரி போலீஸ் பரிசோதகர்  ராஜபக்ச மற்றும் போலீஸ் உப பரிசோதகர் சேந்தன் ஆகியோரால் கடுமையாக அச்சுறுத்பதபட்டு அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டு அடையாள அட்டையும் ஆளும் புகைப்படம் எடுத்தும் மிரட்டப்பட்டனர்.
அரசு அறிவித்த ஆயிரம் லீற்ரர் எரிபொருள் மட்டும் அத்தியவாசிய தேவைகளுக்கு வழங்கவென ஒதுக்குமாறு பகுக்கப்பட்ட நிலையில் 6600 லீற்ரர் பெற்றோல் பதுக்கப்பட்டு தமக்கு வேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்தாக மக்கள் தெரிவித்த நிலையில் இன்று சுமார் இரண்டாயிரம் லீற்ரர் பெற்றொலுக்கு மேல் இருப்பு உள்ளதாகவும் இந்நிலையிலேயே பெற்றோல் விநியோகம் இடம் பெறுகிறது
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமைத்துவம் ஒத்துழைக்காத பதசத்தில் பிரதேச செயலகம் பொறுப்பேற்று எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை பிரதேச செயலருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் ஊடகவியலாளர் சி.த.காண்டீபனை அச்சுறுத்தியமையும் குறிப்பிட தக்கதது
வடமராட்சி

Recommended For You

About the Author: Editor Elukainews