வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில்….!

தற்போது வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்
 தமக்கு டீசல் வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக வீதியின் இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
தமது அலுவலகமான பருத்தித்துறை சந்தை சூழலிருருந்து வருகை தந்து தற்போது பருத்தித்துறை பிரதேச செயலகம் முன் அமர்ந்து கோசம் எழுப்புகின்றனர்
இதில் பருத்தித்துறை சாலை முகாமையாளர் ஒழிக, டீசல் வழங்குவதில் நியாயம் வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews