உலக சூழல் தினத்தை அமுலாக்கும் விதமாக மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறாலோடைக் கடற்கரையோரத்தினை சுத்தமாக்கும் பணிகள் பிரதேச செயலாளர் ஜி. அருணன் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச மக்கள், மீனவர்கள் மற்றும் சூழல் நேய செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடற்கரையை சுத்தமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வீ எபெக்ற், கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதேச செயலாளர் அருணன் பிரதேச செயலக அதிகாரிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.