இன்றைய தினம் காலை 9:00 மணிமுதல் தமக்கு பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம சேவகர்கள் போராட்டம் இன்று பெற்றோல் வழங்கியதை அடுத்து நிறைவுக்கு வந்தது.
அத்தியாவசிய சேவைக்குள் கிராம சேவகர்கள் உள்ளடக்கப்படுவதாக பொது நிர்வாக சேவைகள் அமைச்சு சுற்று நிருபம் மூலம் அறிவித்தும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பெற்றோலை பெற்றுக் கொடுக்காத நிலையிலேயே இன்று கிராம சேவகர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பிரதேச செயலர் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டு கலந்துரையாடலிலேயே கிராம சேவகர்களுக்கு பெற்றோல் வழங்குவது என்ற முடிவின் பிரகாரம் பெற்றோல் வழங்குவதென தீர்மானித்து பிற்பகல் 5:00 மணியளவில் பருத்தித்துறை கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த கிராம சேவகர் போராட்டம் கைவிடப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் அத்தியாவசிய சேவைக்கான எரிபொருள் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ.சிறி தலமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் 551 படைத்தலமையக பிரிகேடியர் சிந்திக்க ரத்நாயக்க பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க,உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட, வல்வெட்டித்துறை போலீஸ் பொறுப்பதிகாரி
Rmsa pathmasri. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் வே.கமலநாதன், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்
இதில் மிக. மிக அத்தியாவசியமான அலுவர்களுக்கு மட்டுமே பட்டியலின் அடிப்படையில் எரிபொருள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.