நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் சமகால நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.