நாட்டினுள் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் கடுமையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அனைத்து வைத்திசாலைகளிலும் அத்தியாவசிய மருந்துகளில் கட்டுப்பாடுகளை காணக்கூடியதாக உள்ளது.
எமக்கு சுதந்திரமாக மருந்துகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இன்றைய தினம் நாம் ஓளரவிற்கு அதிர்ஷ்டசாலிகள்.
தற்போது மருந்து பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் மாற்று பயன்பாடு உள்ளது.
ஒரு மருந்து இல்லை என்றால் மற்றொரு மருந்து உள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களை உரிய முறையில் நிர்வகிக்கவில்லை என்றால் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவுடன் மருந்து இல்லாமல் இறக்கக்கூடும் என்று கூறினார்.