பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகள் இணைய விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின், 14வது மாநாடு கடந்த 23ம் தேதி தேதிகளில் சீன அதிபர் ஜிஜிங்பிங் தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் இக்கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இரு நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பு தலைமையகத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளதாக ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகளின் வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.