மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா கும்பாபிசேக எண்ணை காப்பு சாத்தும் நிகழ்வு மூன்றாம் திகதி ஆரம்பமாகிறது!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மன்னர் திரு கேதீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்ப்பு வரும் ஆறாம் திகதிஇடம்பெற உள்ள நிலையில் எதிர்வரும் 3, 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், எண்ணைக் காப்பு    சாத்தும் நிகழ்வு இடம்பெற்று6 ம் திகதி வியாழக்கிழமை, மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளதாக திரு கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷே நிகழ்வை முன்னிட்டு, பூர்வாங்க கிரிகைகள் நேற்று ஆலய பிரதம குரு சிவ சிறி தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியது,

எதிர்வரும் 5 நாட்கள், பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று, எதிர்வரும் 3, 4 மற்றும் 5 ம் திகதிகளில், எண்ணைக் காப்பு    சாத்தும் நிகழ்வு இடம்பெற்று6 ம் திகதி வியாழக்கிழமை, மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்த பிரதம சிவாச்சாரியார்களின் தலைமையில் ஆரம்பமாகிய கும்பாபிஷேக திருவிழா, ஓதுவார் மூர்த்திகளின் வேத மந்திர பாராயணங்களுடன், தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் 6 ம் திகதி, கௌரி அம்பாள் உடனுறை திருக்கேதீஸ்வரப்  பெருமானுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பூஜைகள் இடம்பெற்று, கருவறை விக்கிரகங்களுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம், மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews