பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றிருந்த லொறியின் பின்பகுதி உடைந்து விழுந்ததில் 13 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறித்தசம்பவம் அனுராதபுரம் கலென்பிந்துணுவெவ பகுதியில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது.
பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறி ஒன்றில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின்புற பகுதி உடைந்து விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பிரதேச வாசிகள் காயமடைந்த மாணவர்களை கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன்,
மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின்போது மாணவர் ஒருவரின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கலென்பிந்துணுவெவ வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்