கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் இராணுவத்தினரின் சிறுவர் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. குறித்த பூங்காவில் தினமும் கல்வி பயிலும் சிறுவர் ,சிறுமிகள் என பலர் குறித்த பூங்காவில் சமூக சீர்கேடாக நடந்து கொள்கின்றமையை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டி வந்திருந்தனர். இதன் அடிப்படையில் நேற்று (02) குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர் ஒருவர் நேரடியாக சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தியதையடுத்து கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து விரைந்த தவிசாளர் திரு .வேழமாழிகிதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்துள்ளனர்.நேரடியாக அவர்கள் பார்வையிட்டதையடுத்து அங்கிருந்த சிறுவர் சிறுமிகளை விசாரிக்க முற்பட்ட போது அங்கிருந்த சிறுமிகள் சிலர் தமது காதலர்களுடன் தெறித்து ஓடிவிட்டனர்.
சிலருக்கு அறிவுரையும் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் எமது தமிழ் பிள்ளைகளின் பழக்கவழக்கத்தை சமூக பண்பாட்டையும் திசைதிருப்பும் முகமாகவே இதனை இராணுவத்தினர் செய்து வருவதாகவும் பூங்காங்களை நிருவகிக்கும் பொறுப்பு உள்ளூராட்சி சபைகள் சொந்தமானது எனவும் உள்ளூராட்சிக்கு சொந்தமான பணிகளை இராணுவத்தினர் பறித்து வைத்திருப்பதாகவும் இப்படி பூங்காக்களை நடத்துவது சிறுவர் சிறுமிகளை தவறாக வழிநடத்துவதற்கே எனவும் குறித்த பூங்காவை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் எமது பிள்ளைகள் தவறான வழிகளில் செல்வதை தடுக்க இராணுவம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
https://we.tl/t-OrLte7XUSz