லிபியாவில் தீவிரமடைந்த போராட்டம்! போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்றம்

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.

லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர். தற்போது லிபியா தலைநகர் திரிப்போலியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லிபியாவில் தீவிரமடைந்த போராட்டம்! போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்றம் | Protesters Set Fire To The Libyan Parliament

இந்த போராட்டங்களுக்கு லிபிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews