விக்ரம் படம் புதிய சாதனை!

கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் 11 நாள்களில் உலகம் முழுக்க 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் கடந்த 3 ஆம் திகதி வெளியானது.

படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் 11 நாள்களில் 300 கோடி இந்திய ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலைக் கண்ட படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2013-ல் வெளியான கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் வசூல் 200 கோடி இந்திய ரூபாயை தாண்டியது.

Recommended For You

About the Author: Editor Elukainews