மட்டு.அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு யாத்திரை குழுவினர் வருகை

கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் தொண்டமான் ஆறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த புனித பாத யாத்திரையின் 105 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர் .

நாட்டில் சாந்தி ,சமாதனம் ,நல்லிணக்கம் ,இனங்களுக்கிடையே ஒற்றுமை மற்றும் தற்போது நாட்டு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடவேண்டும் என ஜெயா சாமி என்பவரின் வழிகாட்டலின் யாழ் தொண்டமான் ஆறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கதிர்காம கந்தன் ஆலயத்திற்கான பாத யாத்திரை பக்தர்கள் நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்.

மட்டக்களப்பை வந்தடைந்த பாத யாத்திரையின் பக்தர்கள் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற பஜனை வழிபாடுகளை தொடர்ந்து கதிர்காமத்தை நோக்கி பயணித்தனர்.

யாழ்.தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து 105 பேர் கொண்ட பக்த குழுவினர் ஆரம்பித்த புனித பாத யாத்திரை பக்த குழுவினர் கதிர்காமம் முருகன் ஆலயத்தினை சென்றடைந்ததும் கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவத்தில் கலந்து சிறப்பிப்பதுடன் தமது பாத யாத்திரையினை நிறைவு செய்துகொள்ளவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews