திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்

அம்பாறை  திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக பயனாளிகளின் பங்களிப்புடன் அரசின் மானிய உதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 22 சுயதொழி முயற்சியாளர்களுக்கு நீர் இரைக்கும் இயந்திரம் மா மிளகாய் அரைக்கும் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதிவப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் சமுர்த்தி முகாமையாளர் பி.பரமானந்தம் கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

அரசாங்கத்தின் கம சமக பிலிசந்தர வேலைத்திட்டதின் ஊடாக கிராம மட்டங்களில் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி கிராம மட்டத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தி தேசிய பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews