ரஷ்யாவிடம் கடன் உதவி கோரிய ஜனாதிபதி கோட்டாபய! –

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது,
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் உரையாடினேன். கடந்த கால சவால்களை சமாளிக்க அவரது அரசாங்கம் வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை தோற்கடிப்பதற்காக இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் ஆதரவை கோரினேன்.
அத்துடன் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது நமது இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நட்பை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டோம்’ என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews