அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் நிமல் சிறிபால டி சில்வா! –

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகிய அமைச்சர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜப்பானிய நிறுவனத்திடம் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவுறும் வரையில், தாம் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஜப்பானில் உள்ள வுயளைநi என்ற நிறுவனத்திடம் இலஞ்சம் கோரியமை தொடர்பில் ஜனாதிபதி மிகவும் வருத்தமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான ஊழல் அரசாங்கத்தை கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியுமா எனவும் நேற்று நாடாளுமன்றில் சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஊழல், மோசடி, திருட்டு என்பன அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews