யாழ் போதனா வைத்தியசாலை சுகாதாரபணியாளர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது.

இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்று(6) பத்து துவிச்சககர வண்டிகள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக கையளிப்பு செய்யப்பட்டது.

நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில் சங்கத்தின் சார்பாக உபதலைவர் விநாசித்தம்பி நாகேந்திரம், செயலாளர்  பரமநாதர் தவராஜா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் கந்தசாமி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

பத்து துவிச்சக்கர வண்டிகளையும் பிரதிப் பணிப்பாளர்கள் பவானந்தராஜா, யமுனானந்தா மற்றும் வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரும் பெற்றுக்கொண்டனர். பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினரிடம் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews