கொழும்பில் அதியுச்ச பாதுகாப்பு..! மேலதிகமாக 5 ஆயிரம் இராணுவம், 3 ஆயிரம் பொலிஸ் அழைப்பு,

நாளை 9ம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும். எனக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் கொழும்பில் பாதுகாப்பு உச்ச அளவில் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த 8 ஆயிரம் பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போதும் படிப்படியாக கொழும்பு நோக்கி வருகை தருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

3 ஆயிரம் பொலிஸாரும். 5 ஆயிரம் இராணுவத்தினரும் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன

Recommended For You

About the Author: Editor Elukainews