கோட்டாபயவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்து கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பன ஏற்கனவே போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது அலரி மாளிகையும் போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் உள்ள நிலையில் அங்கு கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாபதி மற்றும் பிரதமர் பதவி விலகும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும் எமது போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.