வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று பிற்பகல் 7 மணியளவில் வட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் மகிந்த மற்றும் கோத்த பாய ராஜபக்ஜ ஆகியோரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது
வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் தலமையில் வட்டுக் கோட்டை சந்தியில் இருந்த ஆரம்பமாகிய கண்டன அணிவகுப்பு மாவடி சந்திவரை சென்று அங்கு கோத்தபாய ராஜபக்ச மற்றிம் மகிந்த ராஜபக்கச ஆகியோரது உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டன.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.