பாதயாத்திரீகர்கள் கல்முனையில் இருந்து 57வது நாளில் காரைதீவை வந்தடைந்த போது அங்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
கடந்த 12 வருடங்களாக பாதயாத்திரைக்கு தலைமை தாங்கி சென்ற வேல்சாமி மகேஸ்வரன் அடியார்களுக்கு தீப ஆராதனை செய்து வரவேற்க யாத்திரை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து, பாதயாத்திரை அடியார்கள் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்து விசேட பூஜையில் கலந்து கொண்டதுடனர்.
இன்று சித்தானைக்குட்டி மடாலயத்திற்கும் விஜயம் செய்த குறித்த குழுவினருக்கு ஆலய தலைவர் பொன்.பாலேந்திரா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் தலைவர் சி.நந்தேஸ்வரன் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பாதயாத்திரை குழுத்தலைவர் சி.ஜெயராசா முன்னாள் தலைவர் வேல்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாளை(12) செவ்வாய்க்கிழமை பாதையாத்தீரீகர்கள் காரைதீவு மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தை தரிசிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.