தெற்கு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது போல வடக்கிலும் ஏற்படலாம்- யாழில் மத தலைவர்கள் எச்சரிக்கை!

தென்னிலங்கையில் அரசியல்வாதிகளுக்கு ஏற்படும் நிலைபோல வடக்கில் அரசியல்வாதிகளுக்கும் அவ்வாறான நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மத தலைவர்கள் தெரிவித்தனர்,

தற்போதுள்ளபொருளாதார நெருக்கடியான நிலையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தற்போதைய நிலையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கு உடனடியாக ஒன்று கூட வேண்டும் என யாழ்ப்பாண சர்வ மத தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை காணப்படுகின்றது ஆனால் இந்த நிலையில் தமிழ் அரசியல் வாதிகளை நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காணக்கூடியதாக இல்லை. குரல் கொடுத்ததாகவும் இல்லை. குறிப்பாக எரிபொருள் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து இரவு பகலாக வீதிகளில் தூங்குகின்றார்கள் ஆனால் இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாதா அல்லது தெரிந்து கொண்டு மௌனமாக இருக்கின்றார்களா என தெரியவில்லை.

ஆனால் தற்போதைய நிலையில்  யாழ் மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆ இணைந்து ஒரு முடிவினை எடுத்து இருக்கின்றோம். அதாவது தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்களை அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் ஒரே மேசையில் சந்தித்து ஒரு சில விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

தற்பொழுது கொழும்பில்  நடைபெறும் விடயங்களை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால் வாக்களித்த மக்களே வாக்களித்த தலைவர்களுக்கு எதிராக போராட்டதினை மேற்கொள்கின்றார்கள் அந்த ஒரு நிலையினை வடக்கிலும் ஏற்படுத்தாது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews